களைக்கட்டியது கேமரன் மலை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; தொகுதி மீண்டும் தம் வசமாகும், ம.இ.கா உறுதி

தானா ராத்தா, டிசம்பர் 20: இன்று மாலை நடைப்பெற்ற கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் 2500கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தது அடுத்த 15-வது பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் ம.இ.கா மீண்டும் களம் காண்பதற்கான ஆதரவினை புலப்படுத்துவதாக அமைந்தது.

“இன்றைய தினம் சரித்திரம் படைத்துள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் ம.இ.கா போட்டியிட்டு வென்ற கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி, இவ்வாண்டு ஆரம்பத்தில் நடைப்பெற்ற இடைத்தேர்தலின் போது, தேசிய முன்னணியின் நல்லிணக்கக் கொள்கைக்கொப்பவும், அரசியல் வியூகங்களுக்காகவும் பூர்வக்குடி பிரதிநிதி போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், பூர்வக்குடியினர் என  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டது தேசிய முன்னணி மற்றும் ம.இ.காவின் பால் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பினையும் பிரதிப்பலிக்கின்றது,” என ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி தலைவர் தினாளன் இராஜகோபாலு தமதுரையில் குறிப்பிட்டார்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் ம.இ.கா ஒருங்கிணைப்பாளருமான தினாளன் மேலும் பேசுகையில், கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் மற்றும் பகாங் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி அவர்களின் வழிக்கட்டுதல்களில், ம.இ.கா தமது செயல் நடவடிக்கைகளை மேலும் ஆக்கப்படுத்தி அடுத்த 15-வது பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதி மீண்டும் ம.இ.கா வசம்பெறப் பாடுப்படும் எனக் கூறினார்.

பகாங் மாநில முதல்வரைப் பிரதிநிதித்து நிகழ்வில் சிறப்புரையாற்றிய  மாநில ம.இ.கா தலைவர் வீ. ஆறுமுகம் தமதுரையில் கேமரன் மலை மக்களின் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் தம்மை நெகிழ்வடைய செய்வதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.

“சமய மற்றும் இன வரம்புகளைத் தாண்டி, ம.இ.கா மற்றும் தேசிய முன்னணி முன்வைத்துள்ள முவாபாகாட் நேஷனல் எனப்படும் தேசிய நல்லிணக்கக் கொள்கையினை பறைசாற்றும் வகையில் இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. மக்களின் வழங்கியுள்ள ஆதரவானது எங்கள் சேவைக்கான அங்கீகாரம்,” என ஆறுமுகம் மேலும் கூறினார்.

அதே வேளையில், ம.இ.கா கண்டு வரும் எழுச்சியானது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் சரியான பாதையில் செல்கிறது என்பதனை புலப்படுத்துவதாக அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

இதுகால் வரை இந்திய சமுதாயம், குறிப்பாக கேமரன் மலை இந்தியர்கள் தேசிய முன்னணி மற்றும் ம.இ.காவை புறக்கணிப்பதாக கூறப்பட்டு வந்த வேளையில், இன்றைய நிகழ்வில் மூக்கில் விரல் வைக்கும் வகையில் திரளாக திரண்ட இந்தியர்கள் அக்கூற்றை பொய்யென நிரூபித்துள்ளனர். இத்தொகுதியில் மக்கள் அதிகமான அளவில் கலந்துக்கொண்ட நிகழ்வாக இது அமைகின்றது.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி ம.இ.காவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் உள்ளூர் தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகளின் தலைவர்களும், சமூக தலைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தது நிகழ்வினை மேலும் மெருகேற்றியது.

Be the first to comment on "களைக்கட்டியது கேமரன் மலை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; தொகுதி மீண்டும் தம் வசமாகும், ம.இ.கா உறுதி"

Leave a comment

Your email address will not be published.


*