கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பதவி விலகல்

கோலாலும்பூர், ஜனவரி 2: இன்று மாலை புத்ரா ஜெயாவில் நடைப்பெற்ற சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் தமது பதவி விலகலை அறிவித்தார். காலை முதலே அவரின் பதவி விலகல் பற்றி வதந்தி பரவி வந்த நிலையில், தற்போது அத்தகவல் அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

தமது பதவி விலகல் முடிவினை தம் தந்தை ஸ்தானத்தில் உள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுடன் கலந்தாலோசித்தப் பிறகே எடுத்ததாக மாஸ்லி தெரிவித்தார்.

“பிரதமர் அவர்களின் ஆலோசனைக்கேற்ப, திறந்த மனதுடன் கடந்த 20 மாதங்களாக நான் பொறுப்பேற்றிருந்த கல்வியமைச்சர் பொறுப்பினை துறக்கிறேன்,” என மாஸ்லி கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்பில், தாம் அமைச்சராக கல்வித்துறையில் கொண்டு வந்த மாற்றங்களையும், கொள்கைகளையும் மாஸ்லி விவரித்தார்.

முன்னாள் விரிவுரையாளரான மாஸ்லி மாலிக் அவர்களின் கீழ் சமீப காலமாக கல்வியமைச்சு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, பொதுமக்களின் விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பதவி விலகல்"

Leave a comment

Your email address will not be published.


*