சபா, கிமானீஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி, வாரிசான் (பாக்காத்தான்) நேரடி போட்டி

பியூப்போர்ட், ஜனவரி 4: சபா, கிமானீஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணியைச் சார்ந்த வாரிசான் வேட்பாளர்கள் நேரடி போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

இன்று காலை இங்கு நடைப்பெற்ற வேட்புமனுத் தாக்கலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமட் அலாமீன் மற்றும் வாரிசான் வேட்பாளர் டத்தோ காரிம் பூஜாங் இருவரின் வேட்புமனு பாரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஜேப்ரி இத்தோக் காலை 10.26 மணிக்கு அறிவித்தார்.

14-வது பொதுத்தேர்தலில் கிமானீஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற டத்தோ ஸ்ரீ ஹனிப்பா அமானின் வெற்றி, தேர்தல் முறைக்கேடு காரணங்களால் செல்லாது என கூட்டரசு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 1-ஆம் திகதி அறிவித்ததையடுத்து இந்த இடைத்தேர்தல் நடைப்பெறுகின்றது.

ஜனவரி 18-ஆம் திகதி நடைப்பெறும் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி கிமானீஸ் தொகுதியை தக்க வைக்குமா, அல்லது நம்பிக்கை கூட்டணியிடம் பறிக்கொடுக்குமா? எது எப்படியிருப்பினும், இடைத்தேர்தல் முடிவுகள் சபாவின் ஆளும் வாரிசான் அரசாங்கம் மற்றும் மத்திய பாக்காத்தான் அரசாங்கம் ஆகியவற்றின் மீதான மக்களின் தற்போதைய மனநிலையை பிரதிப்பலிக்கும் வகையில் அமையும் எனபது திண்ணம்!

Be the first to comment on "சபா, கிமானீஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி, வாரிசான் (பாக்காத்தான்) நேரடி போட்டி"

Leave a comment

Your email address will not be published.


*